search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிளக்கு பூஜை"

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. மாலை 4 மணிக்கு விவேகானந்த கேந்திர வளாகத்தில் பஜனையும், 5 மணிக்கு பெண்கள் மாநாடு, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெண்கள் மாநாட்டை கேந்திர நிர்வாக செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ், இணை பொதுச்செயலாளர் ரேகா தவே ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அவர்கள், ஊர்வலமாக விவேகானந்த கேந்திர வளாகத்தில் இருந்து புறப்பட்டு ரெயில்நிலைய சந்திப்பு, பழைய பஸ்நிலைய ரவுண்டானா சந்திப்பு வழியாக பகவதிஅம்மன் கோவிலை சென்று அடைந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் தென்தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் பகவதி அம்மன் கோவில் மேலாளர் சிவராமகிருஷ்ணன், தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், கேந்திர மூத்த ஆயுட்கால ஊழியர் கிருஷ்ணமூர்த்தி, கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். 
    ×